உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்

புதுச்சேரி: நைனார்மண்டபம் முத்துமாரியம்மன் கோவிலில், 108 பால்குட அபிஷேகம் நடந்தது.நைனார்மண்டபம் முத்துமாரியம்மன் கோவில், காசி விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா மற்றும் 108 பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது.விழாவையொட்டி நாகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து நேற்று காலை 108 பால் குட ஊர்வலம் துவங்கியது.கடலுார் சாலை வழியாக சென்ற ஊர்வலம் கோவிலை அடைந்தது. பின்பு, பக்தர்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !