உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு

நவபாஷாணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு

தேவிபட்டினம்: சுட்டெரிக்கும் வெயிலால் நவபாஷாணத்திற்கு வரும் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது.

தேவிப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாணம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி, தை, அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு புனித நீராட வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்தில், கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வரும் கடும் வெயிலால், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே பக்தர்கள் வருகை உள்ளது. மற்ற நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வருவதால், நவபாஷாணத்தில் க்கு பக்தர்களின் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !