உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா கொடிஏற்றத்துடன் துவக்கியது

மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா கொடிஏற்றத்துடன் துவக்கியது

காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் கந்தூரி விழாவை முன்னிட்டு மிகவிமர்ச்சியாக கொடிஏற்றம் நடைபெற்றது.

காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் (பெரிய பள்ளிவாசல்) 199ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று முன்தினம் துவங்கியது.பகல் 3.00 மணிக்கு இரதம், பல்லக்கு ஊர்வலம் துவங்கியது.பெரிய பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட இரதம்,பல்லக்குகள் பள்ளிவாசலில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இரவு கொடியேற்றம் மிக விமர்ச்சியாக நடைபெற்றது.முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புனித கொடி கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட வண்ண ரதம்,கப்பல் ரதம் உள்ளிட்ட பல்வேறு ரதங்கள் ஊர்வலத்துடன் பள்ளிவாசல் வந்தடைந்தது.அதைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் புனித கொடி தூ-வா ஓதப்பட்டு ஏற்றப்பட்டது.அப்போது பள்ளிவாசல் முழுவதும் மின் அலங்காரமத்துடன் காணப்பட்டது. வணவேடிக்கை அனைவரும் கவரும் வகையில் அனைவரும் பார்வையிட்டனர்.மேலும் வரும் 22ம் தேதி இரவு சந்தனக்கூடு மற்றும் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம்,நாகதியாகராஜன்,செல்லப்பா மற்றும் சீனியர் எஸ்.பி.,நாரா சைதன்யா,மாவட்ட எஸ்.பி., சுப்ரமணியன்,கெளஹால் நிதின் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் 100க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !