ராமேஸ்வரம் அக்னி தீர்த்த சாலை : ஹிந்து மக்கள் கட்சி மனு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அக்னி தீர்த்த கடற்கரை சாலை அமைக்க ஹிந்து மக்கள் கட்சியினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஹிந்து மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரபாகரன், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கானிடம் கொடுத்த மனுவில் : விழா, விடுமுறை நாளில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள் திரும்பி செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இதனை தவிர்க்க அக்னி தீர்த்த கடற்கரை தெற்கில் கடலோரத்தில் தீர்த்த கடற்கரை சாலை அமைக்க நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்தனர். சாலை அமைத்தால் பக்தர்கள் சிரமமின்றி, போக்குவரத்திற்கு இடையூறு இன்றி எளிதில் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியும். இத்தீர்த்த சாலை குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லாமல் உள்ளது. இக்கடலோர பகுதியில் பரவி கிடக்கும் மணலை சீரமைத்து சிறப்பான தீர்த்த சாலை அமைக்க முடியும். இதுகுறித்து முதல்வரிடம் எடுத்துரைத்து தீர்த்த சாலை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.