சென்னியாண்டவர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்
ADDED :1300 days ago
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் மண்டபத்தில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. அதில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன. பணிகள் நிறைவு பெற்று இன்று திறப்பு விழா நடக்கிறது. பங்குனி உத்திரம் மற்றும் திறப்பு விழாவை ஒட்டி, திருக்கல்யாண உற்சவ திருவிழா இன்று காலை, 6:00 மணிக்கு துவங்குகிறது.