உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம்மன் கோவிலில் பங்குனி உத்திரம் விழா

நாகம்மன் கோவிலில் பங்குனி உத்திரம் விழா

மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் உள்ள நாகம்மன் கோவிலில், இன்று பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறுகிறது. சிறுமுகையில் பவானி ஆற்றின் கரையோரம், சுயம்பு வடிவமாய் நாகம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும், அமாவாசை, பவுர்ணமி, சங்கடஹரசதுர்த்தி, கிருத்திகை, ராகு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, இன்று காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. வ.உ.சி நகர் ராஜகணபதி கோவிலில் இருந்து, நாகம்மன் கோவிலுக்கு பால்குடம், தீர்த்தக்குடம் ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வர உள்ளனர். பின்பு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர், மகளிர் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !