ஆணவம் போக்கும் ஆறுமுகன்
ADDED :1330 days ago
மகாலட்சுமி செல்வத்தால் ஆணவம் கொண்டதால், அவளை மகாவிஷ்ணு புறக்கணித்தார். விஸ்வாமித்திரரின் படையை வென்றதால் காமதேனு ஆணவம் பிடித்து அலைந்தாள். தன்னால் மட்டுமே உயிர்கள் வாழ்கின்றன என்று சூரியன் ஆணவம் கொண்டார். சிவனைப் புறக்கணித்து நடந்த தட்ச யாகத்தில் பங்கற்று அக்னிதேவன் ஒளியிழந்தார். இவர்கள் அனைவரும், உத்திரநாளில் ஆறுமுகனாகிய முருகனை வழிபட்டு ஆணவம் நீங்கி நல்வாழ்வு பெற்றனர்.