முருகனின் முதல் படை வீடு
ADDED :1329 days ago
திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல் வீடு. மற்ற படை வீடுகளில் நின்ற நிலையில் அருளும் முருகன் இங்கு தெய்வானையுடன் மணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கிறது. சூரனை வதம் செய்த முருகனுக்கு வெற்றிப்பரிசு அளிக்கும் விதத்தில் தேவேந்திரன் தன் மகள் தெய்வானையை மணம் முடித்து வைத்தார். இந்த விழா பங்குனி சுவாதி நட்சத்திரத்தன்று விமரிசையாக நடக்கிறது.