ஒரே இடத்தில் ஐந்து சன்னதி
ADDED :1329 days ago
திருப்பரங்குன்றம் மலையைக் குடைந்து கற்பக விநாயகர், முருகன், சிவன், துர்க்கை, பெருமாள் ஆகிய ஐவருக்கும் சன்னதிகள் உள்ளன. சுப்பிரமணியசுவாமி என்னும் பெயருடன் முருகன் அருள்பாலிக்கிறார். அமர்ந்த நிலையிலுள்ள இவரது இடப்பக்கம் தெய்வானை, வலதுபக்கம் நாரதர் உள்ளனர். சூரியன், சந்திரன் அருகில் உள்ளனர். மகிஷாசுரனின் தலை மீது நின்ற கோலத்தில் துர்க்கை தனி சன்னதியில் இருக்கிறாள். அவளைச் சுற்றி பூதகணங்கள் உள்ளனர். தேவ துாதர்கள் வாத்தியம் இசைத்த நிலையில் உள்ளனர்.