உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலுக்கு பேட்டரி கார் நன்கொடை

ராமேஸ்வரம் கோயிலுக்கு பேட்டரி கார் நன்கொடை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பக்தர்கள் வசதிக்கு தனியார் நிறுவனம் ரூ. 17 லட்சத்தில் பேட்டரி கார், மருத்துவ கருவிகளை வழங்கியது.

மதுரையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ரூ. 5 லட்சத்தில் ஒரு பேட்டரி கார், இங்கு துவங்க இருக்கும் மருத்துவமனைக்கு ரூ 7 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள், ரூ.5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நேற்று கோயில் அதிகாரியிடம் வழங்கினார்கள். இதில் பேட்டரி கார், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிகழ்வில் ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத் தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரராமவன்னி, மாவட்ட அரசு வழக்கறிஞர் முனியசாமி, ராமநாதபுரம் ரோட்டரி சங்கம் துணை ஆளுநர் நாகராஜ், தனியார் நிறுவன அதிகாரிகள் சுப்பிரமணியன் ராமநாதன், தினேஷ் டேவிட்சன், பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !