வடக்குபுற காளியம்மன் கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி
ADDED :1331 days ago
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி ஸ்ரீ வடக்குபுற காளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று கோயிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்ச் 26 கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், மார்ச் 27 ல் பால்குடம், தீச்சட்டி, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை பூ தட்டு ஊர்வலமும், மார்ச் 28 கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. மார்ச் 29 ல் பூசத்தாய் ஊருணியில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.