உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை வீரன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

மதுரை வீரன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

க.பரமத்தி: அத்திப்பாளையம் பஞ்சாயத்து வல்லா குலத்துப் பாளையம் ஸ்ரீ மதுரைவீரன், கன்னிமார் மற்றும் கருப்பண்ண ஸ்வாமிகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பழமை வாய்ந்த மதுரைவீரன் மற்றும் கருப்பண்ண ஸ்வாமி கோவில்கள் புதியதாக கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரியிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், கலசம் வைத்தல், தீபாராதனை ஆகியவை நடந்தது. இரண்டாம் காலயாக வேள்வியையடுத்து, மதுரைவீரன், கன்னிமார் ஸ்வாமி மற்றும் கருப்பண்ண ஸ்வாமி கோவில்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.நிகழ்ச்சியில் கொடுமுடி மகேஷ் குருக்கள், கோவில் தர்மகர்த்தா ஜெயபிரகாஷ், கொத்துக்காரர் சாமியப்பன் உள்பட ஏராளமான ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !