வேகமான கடவுள்
ADDED :1323 days ago
உலகிலேயே வேகமாக செல்வது எது எனக் கேட்டால் அதிவேக ரயிலையோ, விமானத்தையோ குறிப்பிடுவார்கள். ஆனால் உலகில் மிக வேகமாக ஓடும் ஆற்றல் பெற்றது மனம். ஒரு நொடியில் ஆயிரம் முடிவுகளை அது எடுக்கும். நொடியில் பல முடிவுகளை மாற்றி விடும். இந்த மனதை விட வேகமாகச் செல்லும் தேரில் ஏறி தேவர்களின் தலைவரான இந்திரன் பவனி வருவார். ரிக் வேதத்தின் கால் பகுதி ஸ்லோகங்கள் இவரது புகழ் பாடுகிறது. இவரது ஆயுதம் வஜ்ராயுதம். நான்கு கைகளுடன் ஐராவதம் என்ற வெள்ளை யானை மீது பவனி வருவார். வேகமாக வந்து மறையும் இடி, மின்னலுக்கும் இவரே அதிபதி.