உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி முத்துமாரியம்மனுக்கு மூலிகை பூஜைகள்

ஊட்டி முத்துமாரியம்மனுக்கு மூலிகை பூஜைகள்

ஊட்டி: ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கேம்ப் முத்துமாரியம்மன் ஆன்மிக கோவிலில், ஆடி அமாவாசையையொட்டி, நேற்று மூலிகைகளால் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆடி அமாவாசையையொட்டி நேற்று மாவட்டத்தில் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஊட்டி பிங்கர்போஸ்ட் சுவாமி விவேகானந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள "கேம்ப் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை மூலிகைகளால் அபிஷேகம், 9.00 மணிக்கு ஹோமம், ஓம்கார தியானம் நடத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு பஞ்ச பூதங்களின் உயிர் சக்திக்கு பல்வேறு மூலிகைகளால் சக்கரம் அமைத்து இயற்கை வழிபாடு நடத்தப்பட்டது. 11 மணிக்கு, "இன்டாக் அறக்கட்டளையை சேர்ந்த கீதா சீனிவாசன் தலைமையில், சூரிய சக்திக்கான மகா தீபம் ஏற்றப்பட்டது. பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் வேப்பிலை படுக்கையில் அமர வைத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வித்து, தேன் வழங்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு மூலிகை பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மானஸ் குழுவினர், ஊர் பொதுமக்கள் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !