மேலுார் காளியம்மன் கோயில் திருவிழா
ADDED :1329 days ago
மேலூர்: மேலுார் நாடார் காளியம்மன் கோயில் 123 வது ஆண்டு பங்குனி திருவிழா நடைபெற்றது. இவ் விழாவை முன்னிட்டு நேற்று மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை ஊற்றி அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று(மார்ச் 31) முளைப்பாரி ஊர்வலம் மற்றும் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.