உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா

முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா

கீழக்கரை: கீழக்கரை அருகே லட்சுமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் 48வது ஆண்டு பங்குனி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது.

கடந்த மார்ச் 22 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து மூலவர் முத்துமாரியம்மன், தர்ம முனிஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் லட்சுமிபுரம் சக்திவேல் முருகன் கோயிலில் இருந்து இளநீர் காவடி, பால்குடம், அக்னி சட்டி உள்ளிட்டவைகள் நேர்த்திக்கடன் பக்தர்களால் செய்யப்பட்டது. சக்தி நாமம் முழங்க வீதி உலா வந்து பூத்தட்டு எடுத்து முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. இரவில் 504 விளக்குபூஜை மாங்கல்ய பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கோயில் முன்பு பொங்கலிட்டனர். நேற்று இரவில் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை லட்சுமிபுரம் நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !