5 அடி உயர பஞ்சலோக நடராஜர் சிலை மீட்பு
சென்னை: கும்பகோணத்தில் சிலை வடிக்கும் பட்டறையில் பதுக்கப்பட்டு இருந்த, 5 அடி உயர பஞ்சலோக நடராஜர் சிலையை, போலீசார் மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், சுவாமிமலை அருகே, டி.மாங்குடி என்ற கிராமத்தில், சதீஷ்குமார், 37, என்பவர், சிலை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். தகவல்அங்கு பழமையான பஞ்சலோக சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
விசாரணை: இதையடுத்து, திருச்சி கூடுதல் எஸ்.பி., ராஜாராம் தலைமையில், அந்த பட்ட றையில் சோதனை நடத்தப் பட்டது. அப்போது, 5 அடி உயரம், 4 அடி அகலம் உள்ள பஞ்சலோக நடராஜர் சிலையை கைப்பற்றினர்.இந்த சிலைக்குரிய ஆவணங்கள் எதுவும் சதீஷ்குமாரிடம் இல்லை. இந்த சிலை, எந்த கோவிலில் திருடப்பட்டது, சதீஷ்குமாருக்கு எப்படி கிடைத்தது, விற்க முயற்சி நடந்ததா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.