திருத்தணிகை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் படிவழி பாதை அமைக்க பூமி பூஜை
திருவள்ளுர் : திருவள்ளுர் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, திருத்தணிகை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள 9 நிலை கிழக்கு இராஜகோபுரத்தையும், கோயில் இரதவீதியினையும் இணைக்கும் வகையில் ரூ.92 இலட்சம் மதிப்பிட்டில் புதியதாக கட்டப்படவுள்ள படிவழி பாதைக்கான பணியை நேற்று (31ம் தேதி) இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, அப்பணியை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன்; இ.ஆ.ப., அவர்கள்; முன்னிலையில் துவக்கி வைத்தார். விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ்,இ.ஆ.ப., திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சந்திரன், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் திரு.பரஞ்சோதி, இணை ஆணையர் (தக்கர்) திரு.சி.லட்சுமணன், முன்னாள் திருத்தணி நகர்மன்ற உறுப்பினர் திரு.எம்.பூபதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.