நல்லவர்களை கடவுள் சோதிப்பது ஏன்?
ADDED :1314 days ago
நல்லவர்கள் தங்கம் போன்றவர்கள். தீயவர்கள் துரு பிடித்த தகரம் போன்றவர்கள். தங்கம் விலை மதிப்பற்றது. எல்லாராலும் விரும்பப்படுவது. அது சொக்கத் தங்கமாக ஜொலிப்பதற்கு காரணம் பலமுறை நெருப்பிலிட்டு மாற்று அடிப்பதால் தான். அதுபோல், நல்லவர்களுக்கு சோதனை தருவதன் மூலம் கடவுள் அவர்களை மேலும் தங்கமாக்குகிறார். துருபிடித்த தகரம் எதற்கும் பயன்படாதது போல் இப்பிறவியில் தீயவர்களுக்கு என்ன தான் சோதனை தந்தாலும், அவர்கள் திருந்த மாட்டார்கள் என்றுதான் கடவுள் அவர்களைக் கண்டு கொள்வதில்லை போலும்! யாருக்கு சோதனைகள் அதிகமாக ஏற்படுகிறதோ அவர் அருகில் சுவாமி இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.