ஒருவர் அமர்ந்து சாப்பிடும் திசையை பொறுத்து கிடைக்கும் நன்மைகள்!
ADDED :4864 days ago
சாஸ்திரங்களில் ஒருவர் அமர்ந்து சாப்பிடும் திசையும் அதன் பலன்களும் குறிப்பிட்டுள்ளனர். அவை .. கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வி வளரும். மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் பெருகும். வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் வரும், வந்தநோய் வளர்ந்து கொண்டே இருக்கும். தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அழியாதப்புகழ் நமக்கு ஏற்படும். இவையெல்லாம் நமது வீட்டில் சாப்பிடும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள். நண்பர்,உறவினர் வீடுகளில் மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக் கூடாது.அப்படிச் சாப்பிட்டால் மறு நாளிலிருந்தே அவருக்கும் நமக்கும் பகையாகிவிடும். வீடு தவிர மற்ற இடங்களில் வடக்கு நோக்கிச் சாப்பிடாமல் இருந்தால் போதுமானது.