சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி கொடியேற்றம்
ADDED :1326 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி மூன்று மாத கொடியேற்றம் நடந்தது. இக்கோயிலில் வைகாசி திருவிழா 17 நாட்கள் நடக்கும். நேற்று இரவு பக்தர்கள் பின்தொடர பூஜாரி சண்முகவேல் கொடியுடன் நான்கு ரதவீதிகளை சுற்றி ஊர்வலம் வந்தார். பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க பீடத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக ஜூன் 14ல் பால்குடம், அக்னிச்சட்டி, 15ல் பூக்குழி, 21ல் தேரோட்டம் நடக்கிறது.