உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சிபுரம் மாரியம்மனுக்கு நாளை கும்பாபிஷேக விழா

காமாட்சிபுரம் மாரியம்மனுக்கு நாளை கும்பாபிஷேக விழா

சூலூர்: காமாட்சி புரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்டது காமாட்சிபுரம். இங்குள்ள மாரியம்மன் கோவில், 60 ஆண்டுகள் பழமையானது. இங்கு, கோபுரம், மகாமண்டபம் வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து, நேற்று மாலை, விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நான்கு கால ஹோமங்கள் முடிந்தபின், நாளை காலை, 9:30 மணிக்கு மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாரியம்மன் வழிபாட்டுக்குழு சமய, சமூக நல அறக்கட்டளையினர், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !