நத்தம் பத்ரகாளியம்மன் கோவில் பங்குனித் திருவிழா
ADDED :1324 days ago
நத்தம்: நத்தம் வெட்டுக்காரதெரு பத்ரகாளியம்மன் கோவில் 3 நாள் பங்குனித் திருவிழா நடந்து வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 5) அழகர் கோவில் தீர்த்தம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகை பூஜைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின் இரவு 10 மணிக்கு அம்மன் குளத்திலிருந்து சக்தி கரகம் பாவித்து, நகர்வலம் வந்து கோவில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி பத்ரகாளி அம்மனை தரிசனம் செய்தனர். இன்று பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்தல், மற்றும் குத்துவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெறும்.