உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா விஷ்ணு கோவிலில் தோஷ நிவர்த்தி பூஜை: பக்தர்கள் ஆர்வம்

மகா விஷ்ணு கோவிலில் தோஷ நிவர்த்தி பூஜை: பக்தர்கள் ஆர்வம்

பந்தலூர் : பந்தலூர் அருகே பொன்னானி மகா விஷ்ணு கோவில் தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் பிரசித்தி பெற்றதும், கேரளா மாநிலம் நடுவத்து மனவகைக்குட்பட்டதுமான, பொன்னானி ஸ்ரீ மகா விஷ்ணு கோவில் தோஷ நிவர்த்தி மற்றும் தேவஸ்தனம் கூட்டுதல் மற்றும் தாந்திரீக முறைப்படி கோவில் பிரதிஷ்டை செய்த தின விழா சிறப்பாக நடந்தது. 4-ம் தேதி அதி காலை கணபதி ஹோமம் மற்றும் பிரசாத சுத்தி, தீபாராதனை, வாஸ்த்து ஹோமம் வாஸ்து பலி அத்தாழ பூஜை நடந்தது.5 ம் தேதி சிறப்பு பூஜைகள், கலச பூஜை, உச்ச பூஜை ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. 6 ம் தேதி காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், மிர்த்துஞ்ஜய ஹோமம், 25 குடங்களில் நடந்த கலச பூஜையில், கூடலூர் பந்தலூர் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மதிய பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பூஜைகளை நம்பூதிரி, தாமோதரன் நம்பூதிரி, தனுஷ் நம்பூதிரி மற்றும் ஸ்ரீகுமார் தலைமையிலான பூஜைகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !