உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏப்.9ல் அமர்நாத் வைஷ்ணவி வாழ்க்கை வரலாறை விவரிக்கும் சொற்பொழிவு

ஏப்.9ல் அமர்நாத் வைஷ்ணவி வாழ்க்கை வரலாறை விவரிக்கும் சொற்பொழிவு

சென்னை: காஞ்சி மடம் சார்பில், காஷ்மீரின் பெருமைகளை விளக்கும் வகையில் ஏப்., 9ம் தேதி நடக்கும் 34வது வார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் -அமர்நாத் வைஷ்ணவியின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் சொற்பொழிவு நடக்கிறது.

காஞ்சி மடம் சார்பில் காஷ்மீரின் பெருமைகளை விளக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி ஆக., 15 முதல்சனிக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி மாத்யம தர்ம சமாஜத்தின், யூ -டியூப் சேனலில் ஒளிபரப்பாகிறது. இந்த வகையில், 34வது வார நிகழ்ச்சி, ஏப்., 9ம் தேதி இரவு 7:00 மணிக்கு காஷ்மீரின் வரலாறுகள்-; அமர்நாத் வைஷ்ணவியின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் ஸ்ரீபாலகிருஷ்ண சன்யாசியுடன், ரோஹினி வைஷ்ணவி இணைந்து சொற்பொழிவாற்றுகிறார். ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும், நேரலையாக ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிகளை பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com /channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA என்ற, யூ டியூப் சேனலில், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.மேலும் kamakoti.tv, Kanchi Kamakoti Facebook, Kanchi Kamakoti YouTube, KanchiMutt Twitter ஆகியவற்றிலும், இந்த நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !