செல்வகாளியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
ADDED :1319 days ago
காரியாபட்டி: காரியாபட்டி கெப்பிலிங்கம்பட்டியில் செல்வகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சர்வ அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் வைபவம் நடந்தது.