கோட்டை பெரிய பகவதி அம்மன் கோயில் திருவிழா
ADDED :1617 days ago
செம்பட்டி: சித்தையன் கோட்டை அருகே சேடபட்டியில் கோட்டை பெரிய பகவதி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாமி சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், தோரண கால் ஊன்றுதல், கரகம் பாலித்தல், அம்மன் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது. விழாவை முன்னிட்டு ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.