உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டு கோவிலில் திருட்டு மர்ம நபருக்கு வலை

காட்டு கோவிலில் திருட்டு மர்ம நபருக்கு வலை

சிதம்பரம்: சிதம்பரம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள காளி கோவிலில் கோவில் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

சிதம்பரம் புவனகிரி பைபாஸ் சாலையில் மேற்குப் பகுதியில் காட்டுக்குள் காளி கோவில் ஒன்று அமைந்துள்ளது. சிதம்பரம் வீரராகவன் தெருவைச் சேர்ந்தவர் கபிலர் மனைவி மீனா கோவிலை நிர்வகித்து வருகிறார். கடந்த 5ஆம் தேதி இரவு கோவில் பூஜை முடித்து பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அடுத்த நாள் கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் இருந்த பித்தளை சிலை, தாம்பாளத் தட்டு பித்தளை மணி, குத்துவிளக்கு ஆகிய பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து மீனா கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் மற்றும் கைரேகை துறை நிபுணர்கள் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !