உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலாடி காமாட்சியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா உற்ஸவம்

கடலாடி காமாட்சியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா உற்ஸவம்

கடலாடி: கடலாடியில் காமாட்சி அம்மன், நல்ல காமாட்சி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா நடந்தது. கடந்த மார்ச் 28ல் கோயில் வளாகத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சியுன் துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் பால்குடம் ஊர்வலம் நேத்திக்கடன் பக்தர்களால் எடுக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. கோயில் வளாகத்தில் விளையாட்டுப் போட்டிகள், ரங்கோலி கோல போட்டிகள் நடந்தது. மாலையில் உற்ஸவர் அம்மன் அலங்கார சப்பரத்தில் வீதி உலா வந்தார். பக்தர்களால் பூச்சொரிதல் விழா நடந்தது. மாலையில் கொடியிறக்கம் செய்யப்பட்டு மஞ்சள் நீராட்டு விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !