ஆம்பளை இல்லாத ஊர்
ADDED :1356 days ago
வானரங்கள் வாழும் ஊர் கிஷ்கிந்தை. இங்கு ஒரு ஆண் குரங்கு கூட இல்லாமல் போனது. ஏன் தெரியுமா? அங்கிருந்த பெண் குரங்குகள், சீதையை மீட்பதில் ராமருக்கு உதவி செய்ய விரும்பின. இதற்காக தங்களின் தந்தை, சகோதரர்கள், கணவர், பிள்ளைகள் என அனைவரையும் ராமருடன் அனுப்பி வைத்தன. வானரப் படையின் உதவியால் அரக்கன் ராவணனை தோற்கடித்த ராமர் புஷ்பக விமானத்தில் சீதையுடன் அயோத்திக்குப் புறப்பட்டார். அவருடன் வந்த சுக்ரீவன், கிஷ்கிந்தை வந்ததும் வானரப் பெண்களை சந்திக்கும்படி ராமரை வேண்டினான். சம்மதித்த ராமரும் சீதையுடன் அவர்களுக்கு ஆசியளித்து மகிழ்ந்தார்.