ஆழ்வார் பாடிய அணில்
ADDED :1306 days ago
ஒருவர் வேலை செய்யும் போது, அவருக்கு உதவி செய்பவர்கள் தங்களின் பங்களிப்பை, ‘ராமருக்கு அணில் உதவியது போல’ என்று சொல்வார்கள். உண்மையில் வால்மீகி, கம்பர், துளசிதாசர் எழுதிய ராமாயணங்களில் பாலம் கட்டும் போது அணில் உதவியதாக கூறப்படவில்லை. ஆனால் இந்த செவிவழிக்கதை இந்திய மொழிகள் அனைத்திலும் பிரசித்தமாக உள்ளது. தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய ‘திருமாலை’ என்னும் பாசுரத்தில் ராமருக்கு உதவிய அணில் பற்றிய குறிப்பு உள்ளது.