உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுஷ்கோடியில் ராமர் தாண்டவ பஜனை பிரார்த்தனை

தனுஷ்கோடியில் ராமர் தாண்டவ பஜனை பிரார்த்தனை

ராமேஸ்வரம்: உலக நன்மைக்காக தனுஷ்கோடியில் ஆன்மிக கல்வி மேம்பாட்டு கழகம் சார்பில் ராமர் தாண்டவ பிரார்த்தனை நடந்தது.

இலங்கையில் தனுஷ் வியூகம் அமைத்து ராவணனை வதம் செய்து சீதையை ராமர் மீட்டு வந்தார். ராமரின் சினம் தணிக்கும் விதமாகவும், சமூக மாற்றத்திற்கு குழந்தைகள் ஆன்மிகம், கல்வி பயிலவும், உலக நன்மைக்காக நேற்று அதிகாலை ஆன்மிக கல்வி மேம்பாட்டு கழகம் சார்பில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஏராளமான பெண்கள் கையில் தீபம் ஏந்தி ராமர் தாண்டவ பஜனை பாடி பிரார்த்தனை செய்தனர். இதில் தஞ்சாவூர் பாபா ராஜி போன்ஸ்லே, சாஸ்த்ரா பல்கலை பேராசிரியர் வைத்தியசுப்பிரமணியம், ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன், ஆன்மிக கல்வி மேம்பாடு கழக இயக்குனர் மாதுரி, ஒருங்கிணைப்பாளர் ராமநாதன், பசுமை ராமேஸ்வரம் அமைப்பு நிர்வாகி சரஸ்வதி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !