செஞ்சிக்கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா
ADDED :1317 days ago
செஞ்சி: செஞ்சி கோட்டையில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நடந்தது. அதை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடு மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரை கோதண்டராமர் கோவில் ஆஞ்சநேயருக்கு ராமநவமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.