ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஹெத்தையம்மன் அலங்கார ஊர்வலம்
ADDED :1317 days ago
ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவிலில் நடந்த ஹெத்தையம்மன் அலங்கார ஊர்வலத்தில் திரளான படுகரின மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஊட்டி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், தேர்திருவிழாவையொட்டி உபயதாரர்களின் தேர் ஊர்வலம் நடந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டு உபயதாரர்களின் நிகழ்ச்சி, கடந்த, 18ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று, படுகர் சமுதாய மக்களின் ஹெத்தையம்மன் அலங்கார ஊர்வலம் நடந்தது. கோவில் வளாகத்தில் துவங்கிய அலங்கார ஊர்வலம், பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார், காபிஹவுஸ் சந்திப்பு, கேசினோ சந்திப்பு வரை சென்று மீண்டும் கோவில் வளாகத்தை வந்துடைந்தது. திரளான படுகரின மக்கள் பங்கேற்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஹெத்தையம்மனை தரிசனம் செய்தனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதி படுகரின மக்கள் பங்கேற்றனர்.