உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காலில் ஸ்ரீராம நவமி விழா நடந்தது

காரைக்காலில் ஸ்ரீராம நவமி விழா நடந்தது

காரைக்கால்: காரைக்காலில் விஷ்வ ஹிந்து பரீக்ஷத் சார்பில் ஸ்ரீராம நவமி விழா நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட விஷ்வ ஹிந்து பரீக்ஷத் சார்பில் நேற்று முன்தினம் ஸ்ரீராம நவமி விழா நித்ய கல்யாணப் பெருமாள் கோவில் நடைபெற்றது.இவ்விழாவை கோவில் முதல் தீர்த்தங்கரர் அரங்க நாதாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன் முன்னிலை வகித்தார். முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ராமர் படத்தின் முன் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவில் வெள்ளி தேர் திருப்பணிக்குழு தலைவர் ஆசைத்தம்பி மற்றும் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன், ஆகியோர் மலர்தூவி வணங்கினர். இந்நிழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர்கள் வெங்கடாசலம்,ஜெய்சங்கர்,சிவகுமார் மற்றும் சிவகணேஷ் உள்ளிட்ட ஸ்ரீ ராம பக்தர்கள் பங்கு பெற்று ஸ்ரீ ராம பஜனை பாடினார்கள்.பின்னர் ஸ்ரீ ராமருக்கு தீபாராதனை காட்டி பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !