தமிழ் வருடப்பிறப்பு; ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், காட்டழகர் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டாள் கோயிலில் நேற்று காலை ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வைத்தியநாத சுவாமி கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஐயப்பன் கோயிலில் விசுகனி தரிசனம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு மேல் பிரதோஷ பூஜைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்தி சன்னதியில் பக்தர்கள் அர்ச்சனை செய்து, மாலை சாற்றி வழிபாடு செய்தனர். திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில், காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.