பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
வழிகாட்டுகிறார் ஸ்ரீஅன்னை
* உண்மை பாதையில் பயணித்தால் கதவு திறக்கும். கதவு திறந்தால் கடவுளின் காட்சி கிடைக்கும்.
* தைரியம், திறமை இல்லாதவர்களுக்குத்தான் பிறரை பார்த்து பொறாமைப்பட தோன்றும்.
* மனம்தான் உன்னுடைய வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக அமைகிறது.
* சுயநலம், சுயபரிதாபம் இவைதான் கடவுளின் அன்பை பெற தடையாக உள்ளன.
* தற்பெருமை பேசுவதுதான் உன் முன்னேற்றத்திற்கு முதல்தடை.
* உனது உண்மையான தேவைகள் நிச்சயமாக உன்னைத் தேடி வரும்.
* அமைதியாக இருப்பதைவிட உண்மையை பேசுவதே நல்லது.
* வேலையை உண்மையாய் செய்தாலே நீ கடவுள் இருக்கும் இடத்திற்கு சென்று விடலாம்.
* பிறரை உங்களோடு ஒப்பீட்டு காயப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
* அமைதியாக இரு. மகிழ்ச்சியாக இருப்பாய்.
* தன் கருத்தை மட்டுமே முன்னிறுத்துபவனின் மனம் குறுகிவிடும்.
* சந்தேகம் வேண்டாமே. அது நமக்கு உதவாது.