தேனுபுரீஸ்வரர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்
ADDED :1267 days ago
தாம்பரம்: மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் ஏப்ரல் 21,22,23 ஆகிய தேதிகளில் நவக்கிரகங்களின் தலைமை கிரகமான சூரியபகவான் மூலவர் கபிலநாத சுவாமியினை வழிபடும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இன்று முதல் நடை பெறம் இந்த அரிய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.