காளஹஸ்தி சிவன் கோயில் புதிய நிர்வாக அதிகாரியாக கே வி சேகர் பாபு தேர்வு
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி: ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் புதிய நிர்வாக அதிகாரியாக கே வி சேகர் பாபு இன்று பொறுப்பேற்றார் .இங்கு ஏற்கனவே நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த பெத்தி.ராஜுவை கடப்பா மாவட்டத்திற்கு சிறப்பு துணை கலெக்டராக மாநில அரசு பணி இடமாற்றம் செய்தது .
இந்நிலையில் திருப்பதி அறநிலைத்துறை வட்டார இணை ஆணையாளராக பணிபுரியும் கே.வி. சாகர் பாபுவை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் புதிய நிர்வாக அதிகாரியாக நியமித்து அரசு ஆணையை மாநில அறநலை துறை முதன்மை செயலாளர் ஹரி ஜவகர்லால் நேருவின் உத்தரவின்பேரில் கே.வி. சேகர் பாபு இன்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் புதிய நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். முன்னதாக இன்று காலை கோயிலுக்கு வந்தவரை கோயில் அதிகாரிகள் இவரை கோயில் சம்பிரதாயப்படி சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்த பின்னர் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் கோயில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிரவாதம் செய்தனர் . இதே போல் பணியிட மாற்றத்தில் கடப்பா மாவட்டத்திற்கு செல்லும் பெத்தி. ராஜுவை சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் .இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் புதிய நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற சேகர்பாபு பேசுகையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் அதிகளவில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு, சாதாரண பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி விரைவாக சாமி செய்வதற்கு ஏற்பாடு செய்வதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் .இதற்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரினார்.