உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனங்காட்டு காளியம்மன் திருவிழா

பனங்காட்டு காளியம்மன் திருவிழா

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் முல்லை நகரில் பனங்காட்டு காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது.

கடந்த, 8ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் முகூர்த்தக்கால் பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, அக்னிசட்டி, கம்பம் போடுதல், திருவிளக்கு பூஜை, அம்மன் அழைத்தல், குண்டம் இறங்குதல், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் ஆகியன நடந்தன. நேற்று காலை பொங்கல் திருவிழா நடந்தது. நேற்று மாலை மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா நடந்தது விழாவையொட்டி ஓம் வேலவர் கந்தசஷ்டி அன்னதான சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பனங்காட்டு காளியம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !