உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்புக்கும் பண்புக்கும் வளைந்துகொடு

அன்புக்கும் பண்புக்கும் வளைந்துகொடு


அன்பாக சொல்கிறார் அவ்வையார்

* அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு. விதி உனக்கு வளைந்து கொடுக்கும்.
* கடவுளை உணர்ந்து கொள்வதே நீ கல்வி கற்றதன் பயனாகும்.  
* நீ செய்த பாவ, புண்ணியத்தின் பலன்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.  
* காலம் அறியாமல் செயல்படாதே. மீறியும் செயல்பட்டால் உள்ளதையும் இழப்பாய்.  
* பிறருக்கு உதவினால் நீ உயர்ந்தவன். பிறருக்கு கெடுதல் செய்தால் நீ தாழ்ந்தவன்.
* ஒருவரை காப்பாற்றவோ அழிக்கவோ விதியைத் தவிர வேறு ஒருவராலும் முடியாது.
* வரவுக்கு மேலே செலவு செய்யாதே. மீறி செய்தால் உன்னிடம் பிறர் பேசக்கூட தயங்குவர்.
* நீ செய்த புண்ணியத்தை வைத்தே உனது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
* எவ்வளவுதான் சம்பாதித்தாலும், நீ என்ன அனுபவிக்க வேண்டும் என்று விதி உள்ளதோ அது தான் கிடைக்கும்.
* வெறும் பானையை அடுப்பில் வைத்தால் பொங்குமா. அதுபோல் நீ நாலு பேருக்கு உதவினால்தானே உனக்கு உதவி கிடைக்கும்.
* ஒருவன் படிக்கவில்லை என்றாலும், அவன் செல்வந்தனாக இருந்தால் அவனுடன் எல்லோரும் பழகுவர்.
* நீதி நுால்களில் சொல்லியுள்ள விஷயங்களை முடிந்தவரையில் பின்பற்று.  
* பாலைக் காய்ச்சினாலும் சுவை குறையாது. அதுபோல் நல்லவர்கள் வறுமையிலும் நேர்மையாக இருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !