தில்லை பாதி திருவாசகம் பாதி
ADDED :1288 days ago
மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல திருவாசகத்தை ஓலைச்சுவடிகளில் எழுதியவர் சிவபெருமான். அதை சிதம்பரம் கோயிலில் வைத்து விட்டு மறைந்தார். அதைக் கண்ட அந்தணர்கள் திருவாசகத்திற்கு பொருள் சொல்லும்படி மாணிக்கவாசகரை வேண்டினர். அவரும் சிதம்பரம் நடராஜர் சன்னதியைக் காட்டி ‘இவரே இதன் பொருள்’ என்று சொல்லி கருவறைக்குள் சென்று மறைந்தார். திருவாசகம் வேறு, தில்லை(சிதம்பரம்) நடராஜர் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. இதனடிப்படையில் ‘தில்லை பாதி திருவாசகம் பாதி’ என்னும் பழமொழி ஏற்பட்டது.