சிதம்பரம் தான் நம்பர் ஒன்
                              ADDED :1287 days ago 
                            
                          
                           
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூத சேர்க்கை தான் இந்த உலகம்.  ஐந்து பூதங்களாக இருந்து உலகத்தை வழிநடத்துபவர் கடவுளே. இந்த ஐந்துக்கும் உரியதாக ஐந்து தலங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தனர். அவை கடலுார் மாவட்டம் சிதம்பரம் (ஆகாயம்), ஆந்திராவிலுள்ள காளஹஸ்தி (காற்று), திருவண்ணாமலை (நெருப்பு), திருச்சி திருவானைக்காவல் (நீர்),  காஞ்சிபுரம் (நிலம்) ஆகும். இதில் ஆகாயத்தலமான சிதம்பரமே முதன்மையானது. பஞ்சபூத தலங்களுக்குச் யாத்திரை செல்பவர்கள்  சிதம்பரத்தில் தொடங்கி, காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சிபுரம் என யாத்திரையை பூர்த்தி செய்வர்.