உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்ணெய்நல்லுார் திரவுபதி அம்மன் கோவில் தெப்பல் உற்சவம்

திருவெண்ணெய்நல்லுார் திரவுபதி அம்மன் கோவில் தெப்பல் உற்சவம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே திரவுபதி அம்மன் கோவில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கடந்த 6ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும் இரவு சிறப்பு பூஜை, சாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக கடந்த 22ம் தேதி தீமிதி உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பாஞ்சாலி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். பின், ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் பாஞ்சாலி அம்மன் மற்றும் அர்ஜூனன் சாமிகளை பல்லக்கில் வைத்து தெப்பல் உற்சவம் நடந்தது.பக்தர்கள் குளத்தில் வெற்றிலையின் மேல் சூடம் ஏற்றி சாமியை வழிபட்டனர். அரசூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !