உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா

கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில், கும்பாபிேஷகம் நடைபெற இருப்பதையொட்டி, பந்தல்கால் நடும் விழா நடந்தது.இக்கோவிலில் வரும் ஜூன் மாதம் 9ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. அதனையொட்டி, நேற்று காலை பந்தக்கால் மூகூர்த்தம் நடந்தது. 9:40 மணிக்கு கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து 10:00 மணிக்கு யாகசாலைக்கு பந்தக்கால் நடும் விழா நடந்தது.விழாவில், செயல் அலுவலர் சூரியநாராயணன், பேரூராட்சி தலைவர் அஞ்சுகம் கணசேன், துணைத் தலைவர் ஜோதி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !