புகழி மலையில் ஆடி சஷ்டி விழா
ADDED :4855 days ago
வேலாயுதம்பாளையம்: புகழிமலை ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத சஷ்டி விழா நடந்தது. பிரசித்தி பெற்ற கோவிலில் உச்சி கணபதி, ஸ்ரீ பால சுப்ரமண்ய ஸ்வாமிகளுக்கு, பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உள்பட வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர். அதேபோல் புன்னம் பாலமலை ஸ்ரீ முருகன் கோவில், வேலாயுதம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயம், ஸ்ரீ செந்தில் ஆண்டவர் ஸ்வாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.