உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளியம்மன் கோவிலில் மே 4ல் கும்பாபிஷேகம்

சோளியம்மன் கோவிலில் மே 4ல் கும்பாபிஷேகம்

பொள்ளாச்சி : கிணத்துக்கடவு, வடசித்துார் சோளியம்மன் கோவிலில், விநாயகர், அம்மன் சன்னதிகள், விமானம், முன் மண்டபம் மற்றும் பரிவார தெய்வங்கள் அமைத்து, திருப்பணி நடந்தது. திருப்பணி நிறைவடைந்து, மே 4-ம் தேதி கும்பாபிேஷகம் நடத்தப்படுகிறது.

இதற்காக, நாளை 29ம் தேதி, மங்கள இசை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடக்கிறது.வரும், 30-ம் தேதி தீர்த்த கலசங்கள் அழைத்தல், மே 1-ம் தேதி, முளைப்பாரி இடுதல், அருட்குடங்கள் அலங்கரித்தல், இறைசக்திகளை திருக்குடங்களில் எழுந்தருளச்செய்தல், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக வேள்வி, நவ குண்டங்களில் விேசஷ ஹோமங்கள், திரவியாஹுதி, தீபாராதனை நடக்கிறது. மே 2-ம் தேதி காலை இரண்டாம் கால யாக வேள்வி, மாலையில் மூன்றாம் கால வேள்வி நடக்கிறது. 3-ம் தேதி காலை கோபுர கலசங்கள் நிறுவுதல், திருக்கோயில் முன்வாசல் திறப்பு, அஸ்வ பூஜை, சுமங்கலி பூஜை நடக்கிறது.மே 4-ம் தேதி காலை வேள்வி பூஜை நிறைவடைந்து, 9:15 மணிக்கு விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், சோளியம்மனுக்கும் கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, மகா அபிேஷகம், திருக்கல்யாணம், அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !