உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் பரவசம்

காமாட்சி அம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் பரவசம்

ஆலாந்துறை : ஆலாந்துறை ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில், 95ம் ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள், பூவோடு எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.ஆலாந்துறையில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில், 95ம் ஆண்டு சித்திரை திருவிழா, கடந்த 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

நேற்றுமுன்தினம் காலை, 10:00 மணிக்கு, கோமாதா பூஜை, கோமாதா ஊர்வலம் நடந்தது. அதனைத்தொடர்ந்து இரவு, சக்தி கரகத்துடன் அம்மன் ஊர்வலம் நடந்தது.நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜை நடந்தது. மாலை, நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூவோடு எடுத்து வந்தனர்.இரவு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி சுமந்தபடியும் கோவிலுக்கு வந்தனர். வாண வேடிக்கை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். இன்று, மாவிளக்கு, முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !