உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் கட்டணம் செலுத்த மின்னணு கட்டண சீட்டு கருவிகள் வழங்கல்

கோவில்களில் கட்டணம் செலுத்த மின்னணு கட்டண சீட்டு கருவிகள் வழங்கல்

சென்னை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 550 கோவில்களுக்கு, 1,500 மின்னணு கட்டணச் சீட்டு கருவிகளை, அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

கோவில்களில் பக்தர்கள் வசதிக்காக, சேவைகளை முன்பதிவு செய்யும் வசதியை எளிமையாக்கவும், விரைவுப்படுத்தவும், கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தை தவிர்க்கவும், 1,500 கையடக்க கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.இதில், வடபழநி ஆண்டவர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவொற்றியூர் தியாகராஜர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருத்தணி சுப்பிரமணியர் ஆகிய கோவில்களுக்கு, 50 கையடக்க கருவிகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.பின் அவர் அளித்த பேட்டி: அறநிலையத் துறை நவீன தொழில்நுட்பங்களை, கோவில்களில் நடைமுறைப்படுத்தி வருகிறது. 550 கோவில்களில் இணைய வழி கட்டணம் செலுத்தும், 255 மையங்கள் துவக்கப்பட்டன.அக்கோவில்களின் சேவைகளுக்கு இணைய வழியில் முன்பதிவு செய்யவும், கட்டணச் சீட்டு மையங்களில் கணினி வாயிலாக ரசீதுகள் பெறுவதற்கும், அறநிலையத் துறையின் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது, சேவைகளை முன்பதிவு செய்யும் வசதியை எளிமைப்படுத்தவும் விரைவுப்படுத்தவும், கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தை தவிர்க்கவும், 1,500 மின்னணு கட்டணச் சீட்டு கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டம், அனைத்து கோவில்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும். கிரெடிட், டெபிட் கார்டுகளில் கட்டணம் செலுத்தும் முறையும் அறிமுகம் செய்யப்படும்.பாரத ஸ்டேட் வங்கி, தேசிய தகவல் மையத்துடன் இணைந்து, அறநிலையத் துறையின் ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மைத் திட்ட மென்பொருள் வாயிலாக, இச்சேவை செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !