நாகை சப்பரம் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி
ADDED :1258 days ago
நாகை: நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலின் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக சப்பரம் வீதி உலா நடைபெற்றது. சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலியானார். கடந்த சில தினங்களுக்கு தஞ்சாவூர் அருகே களி மேடு பகுதியில் சப்பரம் தீ பிடித்து 11 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.